என்று என 2 என்று வினவ, செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். திரு எவ்வுளூர் என்று வழங்கப்பட்ட ஊர் இன்று திரு வெள்ளூர் என்ற பெயர் பெற்ற நிலை அமைகிறது. இன்று திருவள்ளூர் எனவும் அமைகிறது. திரு எவ்வுள்ளூர் என்ற பெயர் திருவுள்ளூர் மருவி திருவெள்ளூர் திரிந்து வழங்கியிருக்க வேண்டும் என்ற கருத்து குறித்து காணப்படுகிறது. மேலும், எம்பெருமான் தாம் சயனித்துக் கொள்ள வேண்டிய உள் எவ்வுள் முனிவ வரும் இவ்வுள்ளிலேயே திருக்கண் வளர்ந்தருள்க என்று விண்ணப்பிக்க எம்பெருமானும் அவ்விடத்தில் சயளித்துக் கிடந்தமையால் எம்பெருமானுக்கு எவ்வுள் கிடந்தான் என்று திருநாமம் வழங்கலாயிற்று என்பது இவ்வூர் பற்றிய புராணக் கருத்து. எனவே இறைவன் இருந்த கோயில் பெயர் பின்னர் ஊருக்கும் ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. திருமங்கையாழ்வாரும், திருமழிசைப் பிரானும் இத்தலம் பற்றிப் பாடுகின்றனர்.
பாலனாகி ஞாலமேழுமுண்டு பண்டு ஆலிலை மேல்
சாலநாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன், எண்ணில்
நீலமார் வண்டுண்டு வாழும் நெய்தலந் தண் கழனி
ஏலநாறும் பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே (1058 )
என எவ்வுள் இறைபற்றிபாடுகின்றார் திருமங்கையாழ்வார். மேலும் நாகத்தணை கொண்ட இவன் நிலையை.
நாகத்தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகதி தணையரங்கம் பேரன் பில் ( 3519 ) என்று சுட்டுகின்றார் திருத்மழிசையாழ்வார்.