‘எழுந்து புறத்திசைக்கும் மெய்தெரி வளிஇசை’

உந்தியில் தோன்றும் காற்றின் உள்ளே திரிதரும் கூற்றினவாகிய பரை –
பைசந்தி – மத்திமை – என்ற பகுதிகள் நீங்க, தலை -மிடறு- நெஞ்சு- என்ற
நிலைக்களங்களில், பல் இதழ் நா மூக்கு மேல்வாய் – என்ற ஐந்தன்
முயற்சியானே எழுத்தொலியாக வெளியே செவிப்புலனாகப் புலப்படும்
வைகரிஒலியே இலக்கண நூல்களில் எடுத்து விளக்கிச் சொல்லப்படுவதாம். (தொ.
எ. 102 நச்.)