‘எழுத்தெனப்படுப’ என்ற முதல் சூத்திரச் செய்தி

எல்லாரானும் அறியப்படும் எழுத்துக்களுள், தமிழ் மொழிக்குத்
தொல்காப்பியனார் கொண்ட முதலெழுத் துக்கள் முப்பதே, சார்பெழுத்துக்கள்
மூன்றே எனஎழுத்தின் தொகையை அறிவித்தலே ‘எழுத்தெனப் படுப’ என்ற முதல்
சூத்திரச் செய்தியாகும். பிற்காலத்துக் குணவீரபண்டிதர் தம் சின்னூலில்
முதலெழுத்துக்கள் 31 எனவும், நன்னூலார் முதலெழுத்துக்கள் 30
சார்பெழுத்துக்கள் 10 எனவும், இலக்கணவிளக்க நூலார் சார்பெழுத்து 9
எனவும் கூறுதல் போல்வன தொல்காப்பியனார்க்கு உடன்பாடல்ல. தொல்காப்
பியனார் காலத்துக்கு முன்னும் தமிழெழுத்தின் தொகை பற்றி முரண்பட்ட
கருத்துக்கள் இருந்திருக்கலாம் ஆயினும், அவற்றை உடன்படாது,
‘முதலெழுத்துக்கள் முப்பதே, சார்பெழுத்துக்கள் மூன்றே’ என்று தொகை
கோடற்கே இச்சூத்திரம் எழுந்தது. (எ. ஆ. பக். 5)
எழுத்து என்பது ஒலியெழுத்தினையே குறிக்கும். வரி-வடிவத்தை உருபு,
இயற்கை என்ற சொற்கள் குறிக்கும். (எ.கு. பக். 4 (14-17சூ.)
அகரத்தை முதலாகவும் னகரத்தை ஈறாகவும் உடையவற்றிற்கு எழுத்து
என்னும் பொதுப்பெயர் விதித்தற்கு எழுந்தது இச்சூத்திரம். (சூ. வி.
பக். 19)
அகரத்தை முதலாகவும் னகரத்தை ஈறாகவும் உடையவற்றிற்கு எழுத்து என்று
குறியிட்டாளுதலே இச்சூத்திரக் கருத்து. (எ. கு. பக். 6)