எழுத்துவகையான் நால்வகைப் புணர்ச்சி

நிலைமொழி உயிரீறு, நிலைமொழி மெய்யீறு, வருமொழி உயிர்முதல், வருமொழி
மெய்முதல் – என்ற நிலைகள் உண்மை யான், உயிரீறு உயிர்முதல்- உயிரீறு
மெய்முதல் – மெய்யீறு மெய்முதல் – மெய்யீறு உயிர் முதல் – என்ற
நால்வகையான் புணர்ச்சி நிகழும். (தொ. எ. 107 நச்.)