எழுத்துக்களின் பிறப்புப் பற்றிய வீரசோழியக் குறிப்பு

உந்தியினின்று எழுகின்ற வாயு, உரம்(-மார்பு)-சிரம் – கண்டம்-
மூக்கு- இவற்றின் இடமாகப் பொருந்திப் புறப்படும்போது அண்ணம்-பல்-இதழ்-
நா-என்னும் உறுப்புக்களின் முயற்சி யால் வெவ்வேறு எழுத்தொலியாய்ப்
பிறக்கும். (வீ. சோ. சந்திப். 6)
இவற்றுள் உரத்தை வல்லினமும், சிரத்தை ஆய்தமும், கண்டத்தை உயிரும்
இடையினமும், மூக்கை மெல்லினமும் இடமாகப் பொருந்தும் என்ப. (6.
உரை)