எழுத்துக்களது ‘திரிந்ததன் திரிபு பிறிது’ என்ற நிலை

நிலைமொழிஈறு பிறிதோர் ஈறாகவே திரிந்து புணரும் என்றல்.
எ-டு : மரம்+கோடு = மரக்கோடு
மகரமாகிய ஈறுகெட்டு மர என்றே விதி அகர ஈறாகி நின்று, அகர
ஈற்றுக்குரிய செய்கை பெற்று மரக்கோடு என வருமொழி யொடு புணர்கிறது.
(தொ. எ. 310 நச்)
எ-டு : பொன்+குடம் = பொற்குடம்
னகரஈறு றகர ஈறாகத் திரிந்தே வருமொழியொடு புணரும் என்றல்
திரிந்ததாகிய னகரத்தின் திரிபாகிய றகரம் நின்றே வேற்றுமைப்
புணர்ச்சியில் வன்கணத்தொடு புணர்தல் (தொ. எ. 332). (தொ. எ. 1 நச்.
உரை)