எழுத்துக்களது ஒன்று பலவாதல் நிலை

ஒன்று பலவாகும் சொற்றொடர்களைப் பொதுமொழி என்ப. வரிவடிவில் ஒன்றாகக்
காணப்படும் சொற்றொடர் ஒலிவடி வில் எடுத்தல் படுத்தல் வேறுபாட்டான்
பல்வேறு சொற் றொடர்கள் ஆகும்.
‘எழுத்து ஓரன்ன பொருள்தெரி புணர்ச்சி’ காண்க. (தொ. எ. 1 நச்.
உரை)