எழுத்ததிகாரம்: தொடரிலக்கணம்

அதிகாரம் என்பது ஈண்டு அதிகரித்தலை யுடையதாம். அதனை யுடையது எனவே,
எழுத்தை நுதலி வரும் பல ஓத்தினது தொகுதி எழுத்ததிகாரம்
என்றவாறாயிற்று. எழுத்தினது அதிகாரத்தை யுடையது என்புழி, ஆறாவது
வினைமுதற் பொருண்மையின்கண் வந்த காரகம். (நன். 56 சிவஞா.)