எல்லோர்க்கும் பொதுவான உரைநடை வகை

உரைநடை வகை நான்கனுள்ளும், பாட்டிடை வைத்த குறிப்பினான் வரும்உரைநடையும் பாட்டின்றிச் சூத்திரத்திற் குப் பொருளுரைப்பன போல வரும்உரைநடையும் வரையறையின்றி எல்லார்க்கும் உரிய. (தொ. செய். 175நச்.)