‘எல்லா வழியும் நின்ற சொல்முன் இயல்பு’ ஆவன

நின்ற சொல்- நிலைமொழி. நிலைமொழிகள் உயிர்12, மெய் ஞ் ண் ந் ம் ன்
ய் ர் ல் வ் ழ் ள் – என 11, குற்றியலுகரம் ஒன்று – என்னும் 24
ஈற்றவாய் இருக்கும். இவற்றின் முன் வருமொழி முதலாய் ஞ் ந்ம் என்ற
மெல்லின மெய்களும், ய் வ் என்ற இடையின மெய்களும், பன்னீருயிர்களும்
வருமாயின், பெரும் பான்மையும் திரிபின்றி இயல்பாகப் புணரும். (தொ. எ.
144 நச்.)