எறும்பியூர் மலை

திரு எறும்பூர் எனவழங்கப்படும் இவ்வூர் இன்று திருச்சி மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. தேவர்கள் எறும்பு வடிவம் கொண்டு வழிபட்டனர் எனவே இப்பெயர் என்பது புராணக் கருத்து, எனினும் மலைமேற் கோயில் இருந்தது என்பது அப்பர் பாடல் வழி புரிகின்ற ஒன்று. என, அவர் திருவெறும்பியூர் மலைமேல் மாணிக்கம் விளித்துப் பாடுவதைக் காண்கின்றோம் ( 305 ) எறும்பியூர் மலை இன்று எறும்பூர் ஆக எளிமை கருதி திரிந்தது போலும். கோயில் செல்வாக்கு பெற்ற காரணத்தால் அம்மலைப் பெயரிலேயே ஊர்ப்பெயரும் அமைந்தது எனத் தோன்றுகிறது.