எறிச்சலூர்‌

மாடலன்‌ மதுரைக்‌ குமரனார்‌ என்ற சங்ககாலப்புலவர்‌ இவ்‌ வூரினர்‌. ஆகவே எறிச்சலூர்‌ மாடலன்‌ மதுரைக்‌ குமரனார்‌. எனப்‌ பெயர்‌ பெற்றார்‌. எறிச்சலரர்‌ சோழநாட்டு உள்‌ நாடுகளுள்‌ ஒன்‌றான கோளாட்டைச்‌ சேர்ந்தது. அறந்தாங்‌கிக்கும்‌ குளகாப்‌ பட்டிக்கும்‌ மத்தியிலுள்ளது. புறநானூற்றில்‌ 54, 61, 167, 180, 197, 394 ஆகிய பாடல்கள்‌. கோனாட்டு எறிச்சலூர்‌ மாடலன்‌ மதுரைக்‌ குமரனார்‌. பாடியவை.