எருக்காட்டூர்‌

எருக்கட்டு என்றால்‌ உரத்திற்காகக்‌ கிடை வைத்தல்‌ என்று பொருள்‌. கிடைவைத்த கொல்லை எனப்பொருள்படும்‌. எருக்கட்டு என்ற சொல்‌ நாளடைவில்‌ எருக்காட்டு எனத்திரிந்து அப்பகுதியில்‌ அமைந்த ஊரைக்‌ குறித்திருக்கலாம்‌. அல்லது எருக்கம்‌ காடுகள்‌ நிறைத்த ஊர்ப்பகுதியும்‌ அப்‌பெயர்‌ பெற்றிருக்கலாம்‌. தாயங்‌ கண்ணனார்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ இவ்வூரினர்‌. ஆகவே எருக்காட்டூர்த்‌ தாயங்‌ கண்ணனார்‌ எனப்‌ பெயர்‌ பெற்றார்‌. தஞ்சை மாவட்டத்தில்‌ திருவாரூர்க்குத்‌ தென்மேற்கில்‌ சுமார்‌ மூன்று மைல்‌ தொலைவில்‌ உள்ளது. அகநானூற்றில்‌ 149, 319, 357 ஆகிய பாடல்களும்‌ புறநானூற்றில்‌ 397 ஆம்‌ பாடலும்‌ எருக்காட்டுர்‌ த்‌ தாயங்‌ கண்ணனார்‌ பாடியவை.