இன்று ராஜேந்திர பட்டணம் எனச்சுட்டப்படும் இவ்வூர் தென்னாற்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. எருக்கு என்ற தாவரப் பெயர் அடிப்படையில் இவ்வூர் பெயர் பெற்றிருக்கலாம். இக்கோயிலின் தலமரம் வெள்ளெருக்கு என்ற உண்மையும் மேற் சுட்டியக் கருத்திற்கு அரணாகிறது. ராஜேந்திர பட்டணம் அரசர்களின் செல்வாக்கு காரணமாக மாற்றப்பட்ட பெயராக இருக்கலாம். சம்பந்தர் இவ்விறையை ஒருபதிகத்தில் பாடுகின்றார் ( 89 ) நம்பியாண்டார் நம்பியும் தம் திருத்தொண்டர் திருத்தொகையில் ( 83 ) இவ்வூர் பற்றிய எண்ணம் தருகின்றார். எருக்கத்தம் புலியூர் மன்னிவாழும் திருநீலகண்டர் பற்றி பெரியபுராணம் தருகிறது ( திருநீல – 1 )