எயில்‌

எயில்‌ என்பது கோட்டை எனப்‌ பொருள்படும்‌ சொல்லா யினும்‌ ஊர்ப்பெயராகவும்‌ அமைந்திருந்தமை சங்க இலக்கியங்‌ கள்‌ மூலம்‌ நாம்‌ அறியும்‌ செய்தியாகும்‌. பாண்டி நாட்டு ஊர்களுள்‌ ஒன்று எயில்‌ என்னும்‌ பெய ருடையது. பூதப்பாண்டியனின்‌ நண்பனாகிய ஆந்தை என்ற சிற்றரசன்‌ இவ்வூரை ஆண்டதாகத்‌ தெரிகிறது. இவ்வூர்ப்‌ பெயர்‌ தவிர, பிறவும்‌ எயில்‌ என்ற பெயர்‌ பெற்றிருந்தமை அறிய முடிகின்றது. தொண்டை நாட்டில்‌ இருபத்து நான்கு கோட்டங்கள்‌ இருந்‌தன. அவற்றுள்‌ ஒன்று எயில்‌ கோட்டம்‌ என்பது, தொண்டை நாட்டின்‌ தலைநகரமாகிய காஞ்சிமாநகரம்‌ அக்கோட்டத்தில்‌ அமைந்திருந்தது. அதனால்‌ காஞ்ச எயிற்பதி எனப்‌ பெயர்‌ பெற்றிருந்தது. செஞ்சியின்‌ அருகில்‌ எய்யல்‌ என்னும்‌ பெயருடைய ஊர்‌ ஒன்று உள்ளது. எயில்‌ என்ற ஊர்ப்பெயரே எய்யல்‌ என ஆகி இருக்கலாம்‌ என்று எண்ண இடம்‌ உள்ளது. சோழநாட்டில்‌ திருவாரூருக்கு அருகே பேரெயில்‌ என்னும்‌ பெயருடைய ஒரு கோட்டை இருந்தது. அக்‌ கோட்டையைச்‌ சுற்றியிருந்த சிற்றூர்‌ பேரெயிலூர்‌ என்று பெயர் பெற்றிருந்தது. இப்பொழுது அப்பெயர்‌ பேரையூர்‌ எனச்‌ சிதைந்து வழங்குகிறது.
“பொய்யா யாணர்‌ மையழ்‌ கோமான்‌
மாவனும்‌, மன்‌ எயில்‌ ஆந்தையும்‌, உரைசால்‌
அந்துவஞ்‌ சாத்தனும்‌, ஆதன்‌ அழிசியும்‌
வெஞ்சின இயக்கனும்‌, உளப்படப்‌ பிறரும்‌
கண்‌ போல்‌ நண்பின்‌ கேளிரொடு கலந்த” (புறம்‌. 71: 11 15)
எயிற்பட்டினம்‌ (மதிலொடு பெயரிய பட்டினம்‌)
மதிலொடு பெயரிய பட்டினம்‌ என்று ஓர்‌ ஊர்ப்பெயர்‌ சங்க இலக்கியத்தில்‌ இடம்பெற்று இருக்கிறது. உரை வகுத்த நச்சினார்க்கினியர்‌ அப்‌பட்டினத்தை “எயிற்பட்டினம்”‌ என்று குறித்‌துள்ளார்‌. இது ஓய்மானாட்டு ஊர்களில்‌ ஒன்று. ஓய்மானாட்டுத்‌ துறைமுக நகரமும்‌ ஆகும்‌. சிறுபாணாற்றுப்‌ படைத்தலைவன்‌ நல்லியக்கோடன்‌, “எயிற்‌ பட்டினநாடன்‌” என்றே குறிக்கப்‌ பெற்றுள்ளான்‌. ஆகவே மதி லொடு பெயரிய பட்டினம்‌ என்று சங்க இலக்கியத்தில்‌ குறிக்கப்‌ பெற்றுள்ள ஊர்‌ “எயிற்பட்டினம்‌” என்பது தெளிவு. தென்‌ ஆர்க்காடு மாவட்டத்தில்‌ உள்ள இன்றைய மரக்‌காணமே எயிற்பட்டினம்‌ என்ற கருத்து ஏற்றுக்‌ கொள்ளத்தக்கதாக இல்லை மரக்காணம்‌ என்பது சோழர்‌ காலத்தில்‌ (8. பி. 900 1200) மனக்கானம்‌ எனப்‌ பெயர்‌ பெற்றிருந்ததாகத்‌ தெரிகிறது. மணற்காடு எனப்‌ பொருள்படும்‌ மணற்காணம்‌ என்பதன்‌ திரிபே மனக்கானம்‌. அது நாளடைவில்‌ விஜயநகரவேந்தர்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ மரக்காணம்‌ ஆயிற்று என்றும்‌ தெரிகிறது. ஓய்மானாட்டுக்‌ கடற்கரைப்பகுதியில்‌ பட்டினம்‌ என்னும்‌ ஒரு நகரம்‌ இருந்தது. அதன்‌ பெயரால்‌ கடற்கரைப்பகுதி பட்டினநாடு எனப்‌ பெற்றது, ஓய்மானாட்டு உள்‌ நாடுகளுள்‌ பட்டினநாடு என்பது ஒன்று. மரக்காணம்‌ அப்‌பட்டின நாட்டைச்‌ சேர்ந்தது. “முதலாம்‌ இராசராசன்‌ காலத்தில்‌ (9. பி, 985 1014) மரக்காணம்‌ ஓய்மானாட்டுப்‌ பட்டின நாட்டுத்‌ தேவதான மனக்‌ காரனம்‌ எனப்‌ பெற்றது, மனக்கானம்‌ என்ற கண்டராதித்த நல்லூர்‌ என்றும்‌ வழங்கப்பெற்றிருப்பதால்‌ மரக்காணம்‌ கண்டராதித்தன்‌ காலத்தில்‌ அவனது பெயரைப்‌ பெற்றிருந்தது எனக்‌ கூறலாம்‌. ஆகவே மரக்காணம்‌ வேறு, எயிற்பட்டினம்‌ வேறு. பெரிபுலிஸ்‌, தாலமி போன்றோர்‌ குறித்துள்ள சோப்‌ பட்டினம் என்பது இந்த மதிலால்‌ பெயர்பெற்ற மதிற்பட்டனமாகிய எயிற்பட்டினமே,
“பாடல்‌ சான்ற நெய்த னெடுவழி
மணிநீர்‌ வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப்‌ படுவிறற்‌ பட்டினம்‌ படரின்‌”” (பத்துப்‌ சிறுபாண்‌ 151 153).
“இம்மென்‌ முழவின்‌ எயிற்பட்டின நாடன்‌
செம்மல்‌ சலைபொருத தோள்‌” (சிறுபாண்‌, தனிப்பாடல்‌…. 1:34)