மேலைத் திருமணஞ்சேரி’ எனச் சுட்டப்படும் இவ்வூர் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்து இன்று அமைகிறது. சுந்தரர் பாடல் பெற்றது இத்தலம். திருவேள்விக் குடியிலிருந்து 3கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரின் கிழக்கே கீழைத் திருமணம் சேரி உள்ளது. அரசகுமாரன் ஒருவன் திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் தன் நகர் செல்லும்போது அவனுடைய அம்மானைப்போல் இறைவன் இத்தலத்தில் இருந்து அவனை எதிர் கொண்டு அழைத்துச் சென்றமையால் எதிர் கொள்பாடி என்னும் பெயர் வந்தது என்ற கருத்து இப்பெயருக்கு அமைகிறது. தேனாரும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர் கொள்பாடி என, சேக்கிழார் வருணனை அமைகிறது. ( 35-120-4 )