எண்ணுப்பெயர் பெறும் பொதுச்சாரியை

எண்ணுப்பெயர்கள் உருபேற்குமிடத்தும், வேற்றுமைப் பொருட்
புணர்ச்சிக்கண்ணும் பெரும்பான்மையும் அன்சாரியை பெறும்.
எ-டு : ஒன்றனை, இரண்டனை – (தொ. எ. 198 நச்.); ஏழனை, ஏழற்கு –
(தொ. எ. 194 நச்.); ஒன்றன்காயம், இரண்டன் காயம் – (தொ. எ. 419 நச்.);
ஏழன்காயம், ஏழன்சுக்கு – (தொ. எ. 388 நச்.)