1. எதோளி என்ற வினாச்சொல்: இஃது எவ்விடம் என்னும் பொருளது. இஃது
எதோளிக் கொண் டான் – என வருமொழி வன்கணம் வரின் மிக்கும், ஏனைய கணங்கள்
வரின் இயல்பாகவும் புணரும்.
2. எவ்வழி என்ற வினாச்சொல்: இதுவும் எவ்விடம் என்னும் பொருட்டு.
இஃது எவ்வழி கொண்டான், எவ்வழிக் கொண்டான்- என (இயல்பாயும் மிக்கும்)
வருமொழி வன்கணம் வரின் உறழ்ந்தும், ஏனைய கணங்கள் வரின் இயல்பாகவும்
புணரும். இவை பெயர் நிலையின. (தொ. எ. 159 நச். உரை)