தக்கோலம் என வழங்கப்படும் இத்தலம், வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்து இன்று அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் குறித்துச் சேக்கிழார் சுட்டுகின்றார். ஏயர் கோனும் இங்குச் சென்றதாகக் குறிப்பு கிடைக்கிறது திருவூறல் அமர்ந்திறைஞ்சி ( பெரிய – ஏயர் -28 🙂 நந்தி தீர்த்தம் உள்ளது. பக்கத்தில் கல்லாறு ஓடுகிறது. ஒரு காலத்தில் நந்தி வாயிலிருந்து நீர் வீழ்ந்து கொண்டு இருந்தது என்ற கருத்து நீர் கொண்டிருந்த காரணத்தால் ஊறல் என்ற பெயர் அமைந்ததோ என்ற எண்ணத்திற்கு வழி வகுக்கிறது. இவ்வூர் வளம் குறிக்கும் நிலையில் மிகச் சிறப்பாகச் சம்பந்தர் பாடல்கள் அமைகின்றன.
தேறல் இரும் பொழிலுந் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த
ஊறல் அமர்ந்த பிரான் 106-1
கொண்டல்கடங்கு பொழிற் குளிர் பொய்கைகள் சூழ்ந்து
நஞ்சையுண்ட பிரான் அமரும் திருஊறல் ( 106-5 )