சங்கப் பாடல்களிலிருந்து நாம் அறியும் பெயர்களுள் ஊணூர் என்ற ஊர்ப்பெயரும் ஓன்று. ஊனூர் தழும்பன் என்ற ஒரு வள்ளலுக்குரியதாக இருந்தது. (போரில் பெற்ற தழும்பால் பெயர் பெற்றவன் தழும்பன்), இவ்வூர் கடிமதில் வரைப்பினையுடையது. பழைய பல்வேறு நெற்கூடுகளையுடையது. தழும்பனுக்கு உரிய ஊர் ஆதலின் தழும்பனூர் என்றும் ஊணூரா் கூறப்பெற்றது. ஊணூர் என்பது மருங்கூர்ப்பட்டினத்தின் அருகில் உள்ளது எனத் தெரிகிறது.
“இரும்பாண் ஒக்கல் தலைவன்! பெரும்புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் பிச்சைசூழ் பெருங்களிறு போல, எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே” (ந.ற்.300:9 12)
“பழும்பல் நெல்லின் ஊணூராங்கண்” (அகம்.220:13)
“பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்
கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்” (௸. 227:17 18)
“வாய் மொழித் தழும்பன் ஊணூரன்ன
குவளை உண்கண் இவளை……” (புறம்:348:5 6) (வாய்மொழித் தழும்பனூர் அன்ன” என்ற பாட வேறுபாடு உள்ளது)