ஊசல் (1)

பிரபந்தத் தலைவன் தன்தேவிமாரோடு ஊஞ்சலாடுதலைப் புகழ்ந்து பாடும்ஊசல் என்ற துறை கலம்பக உறுப்புக்களுள் ஒன்று.“யான் பற்பல பிறப்புக்களிலும் உருவம் மாறிப் பிறந்தும் செத்தும்பிறவித்துயரில் ஊசலாடும் செயல் நீங்குமாறு, என் நெஞ்சையே பலகையாகவும்கருணை என்பதனையே ஊஞ் சலைத் தொங்கவிடும் கயிறாகவும் கொண்டு,திருத்துழாய் மாலையும் காதுகளில் அணிந்த மகரகுண்டலங்களும் அசையு மாறு,திருமகளோடும் நிலமகளோடும் திருவரங்கப்பெரு மான் ஊஞ்சல் ஆடுக!”(திருவரங்கக். 58) என்றாற் போலப் பாடுவது.