ஊகாரஈற்று வினையெச்சங்கள் வன்கணம் வரின் மிக்கும், ஏனைய கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும். எ-டு : உண்ணூக் கொண்டான், உண்ணூ நடந்தான், உண்ணூ வாழ்ந்தான், உண்ணூ வடைந்தான் (வகரம் உடம்படுமெய்) (தொ. எ. 265 நச்.)