ஊகார ஈற்று அல்வழிப் பொதுப்புணர்ச்சி

ஊகார ஈற்று அல்வழி எழுவாய்த்தொடர் வன்கணம் வரின் மிக்கும்
ஏனைக்கணம் வரின் இயல்பாகவும் புணரும்
எ-டு : கொண்மூக் கடிது, கொண்மூ ஞான்றது, கொண்மூ வலிது, கொண்மூ
வரிது (வகரம் உடம்படுமெய்) (தொ. எ. 264 நச்.)
ஊகார ஈற்று உயர்திணைப் பெயர்கள் வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கு
முடிதலும், சிறுபான்மை எழுத்துப்பேறள பெடை பெற்று வருதலும், ஏனைய கணம்
வரின் இயல்பாகப் புணர்தலும் நிகழும்.
எ-டு : ஆடூக் குறியன், ஆடூஉக் குறியன்; மகடூக் குறியள், மகடூஉக்
குறியள்;ஆடூ நல்லன், ஆடூ வல்லன், ஆடூ வெளியன் (வகரம் உடம்படுமெய்).
(தொ.எ. 265 நச். உரை)