உறந்தை, உறையூர், கோழியூர் போன்ற பல பெயர் பெற்ற ஊர். பல பெயர்கள் இதன் சிறப்பையும் செல்வாக்கையும் காட்டும், சங்க காலத்திலேயே சோழமன்னர்களின் பெரு மதிப்பினைப் பெற்று, அவர்களின் தலைநகராகத் திகழும் வண்ணம் சிறப்புடன் விளங்கிற்று. சேக்கிழார். சோழனுடன் உறந்தையின் நெருக்கம் கண்டே உறையூர்ச் சோழன் மணியா ரம் சாத்தும் திறத்தை ( ஏயர் -76 ) எனப்பாடிச் செல்கின்றனர். இவ்வூர்ப் பெயர், பண்டு தொட்டே உறந்தை என்றும் உறையூர் என்றும் வழங்கிவருவதால் இடைக்காலத்தும் இவ்விரு பெயர் களையும் புலவர் சுட்டும் நிலை இயல்பாக அமைகிறது. எனினும் உறையூரே முதல் பெயர் உறந்தை மரூஉப் பெயர் என்பதை யும் நாம் அறிகின்றோம். இது காவிரிக் கரையில் உள்ள தொரு ஊர். எனவே அப்பகுதியில் முதலில் மக்கள் உறைவதற்குத் தேர்ந்தெடுத்த ஊர் என்ற நிலையில் மக்கள் உறைவதற்கு ஏற்ற ஊர் என்ற பொருளில் இப்பெயர் தோன்றியிருக்கலாம். உறந்தை என்ற ஊர் மக்களின் சிக்கனம் போன்ற பல காரணங்களால் பின்னர் மருவி வழங்கினும், மக்களிடம் உறையூர் என்ற பெயரும் செல்வாக்கு இழக்க வில்லை என்பதையே இப்பெயரின் வாழ்வு காட்டுகிறது. கோழியூர் சோழன் வரலாறு தொடர் பாக அமைகிறது. இந்த உறந்தை நகரில் விளங்குகின்ற சிராப் பள்ளி எனத் திருநாவுக்கரசர் குறித்த நிலையினைக் ( 15-4 ) காண் கின்றோம். ஆயின் இன்று, திருச்சிராப்பள்ளி செல்வாக்கு பெற, உறையூர் அதனுள் ஒரு பகுதியாக விளங்கக் காண்கின்றோம். முத்தொள்ளாயிரமும், ( 46, 81, 85, 88, 96 )
சிவபெருமான் திருவந்தாதி.
விரையார் புனற் கங்கை சேர் சடையான் பொன்னார்
விரையார் பொழில் உறந்தை மேயான் ( 65 )
எனவும் உறந்தை பற்றி உரைக்கின்றன. உறந்தையில் உள்ள கோயில் முக்கீச்சுரம் எனப்படும். உறையூரை வடமொழியில் உரசபுரம் என்று அழைத்ததாகத் தெரிகிறது..