உறந்தை

உறந்தை என்னும்‌ இவ்வூர்ப்‌ பெயர்‌ உறையூர்‌ என்றும்‌, கோழி என்றும்‌ வழங்கப்பெற்றுள்ளது.“கோழி உறையூர்‌” என்பது பிங்கலம்‌. உறப்பு என்ற சொல்‌ செறிவு என்று பொருள்படுவதைக்‌ காணும்‌ பொழுது, மக்கள்‌ நெருங்கி வாழ்ந்த இடமாக இருந்‌திருக்கலாம்‌ எனத்‌ தோன்றுகிறது. “ஊர்‌ எனப்படுவது உறையூர்‌” எனப்‌ பாராட்டப்‌ பெற்ற இவ்வூர்‌ இன்று திருச்சிராப்பள்ளி நகரின்‌ ஓரு பகுதியாக இருக்கிறது. பண்டைக்‌ காலத்தில்‌ சிறந்து விளங்கிய நகரங்களும்‌ துறை முகங்களும்‌ ஆற்றையடுத்தே உண்டாயின. சோழ நாட்டின்‌ பண்டைய தலைநகரமாய உறையூர்‌ காவிரியாற்றின்‌ கரையில்‌ அமைந்திருந்தது. அலெக்சாந்திரியா நாட்டு வணிகர்‌ ஒருவர்‌ முதல்‌ நூற்றாண்டில்‌ எழுதிய நூலின்‌ மூலம்‌, சோழநாடு கடற்கரைநாடு, உள்நாடு என இரு நாடுகளாக இருந்தது எனவும்‌, கடற்கரை நாட்டைக்‌ காவிரிபூம்பட்டினத்தைத்‌ தலைநகராகக்‌ கொண்டு மற்றொரு தாயத்தாரும்‌ ஆண்டு வந்தனர்‌ எனவும்‌ தெரிய வருகின்றது. உறந்தை நீதிக்குப்‌ பெயர்‌ போனது. சோழர்களின்‌ ஆட்டக்‌ காலத்தில்‌ மெல்லிய பஞ்சாடைகளின்‌ வாணிகத்திற்குப்‌ பெயர்‌ பெற்றிருந்தது. இன்றைக்கும்‌ உறந்தை (உறையூர்‌) கைத்தறி ஆடைகளுக்குச்‌ சிறந்த இடமாக உள்ளது. உறந்தை என்ற பெயரே முதலில்‌ அமைந்தது. பின்னரே உறையூர்‌ என்று வழங்கள்‌ என்பதனை இலக்கியச்‌ சான்றுகள்‌ காட்டுகி‌றன. சங்க இலக்கியத்திலெல்லாம்‌ “உறந்தை என்ற ஆட்சியே மிக்கிருக்க, சிலப்பதிகாரத்தில்‌ ஓரிடத்தில்‌ ‘உறையூர்‌’ என்று இளங்கோ ஆண்டிருப்பதும்‌, இவ்வூரைச்‌ சேர்ந்த புலவர்கள்‌ எல்லோருடைய பெயர்களும்‌ “உறையூர்‌”? என்றே இணைத்துக்‌ கூறப்‌ பெற்றிருப்பதும்‌ குறிப்பிடத்தக்கது. கி.பி. பதின்மூன்றாம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த மாறவர்மன்‌ சுந்தரபாண்டியனின்‌ கல்வெட்டில்‌ “உறந்தை” என்றே கூறப்‌ பட்டுள்ளது. இவ்வூருக்குக்‌ கோழி என்றும்‌ ஒரு பெயர்‌ வழங்கியுள்ளது. ஒரு கோழி யானையைப்‌ போரில்‌ வென்ற இடமாதலின்‌ இப்‌ பெயர்‌ பெற்றது எனச்‌ சிலப்பதிகாரம்‌ கூறுகிறது. இந்நகர்‌ பார்வைக்குச்‌ சிறையும்‌ கழுத்துமாக அமைந்திருப்பதால்‌ சிறையையுடைய கோழி எனப்‌ பெயர்‌ பெற்றது என்ற கருத்தும்‌ உள்ளது. பறவையின்‌ பெயர்கள்‌ சில ஊர்ப்‌ பெயர்களில்‌ அமைந்திருந்தமைக்குக்‌ “கோழி” என்ற இந்த ஊர்ப்பெயர்‌ ஒரு சான்று, வாழ்வும்‌ தாழ்வும்‌ நாட்டிற்கும்‌ நகரத்திற்கும்‌ ஏற்படும்‌ போலும்‌. பண்டைய நாளில்‌ சிறந்திருந்த சில ஊர்கள்‌ இந்நாளில்‌ சிறப்பிழந்து இருக்கின்றன. சங்க காலத்தில்‌ சோழநாட்டின்‌ தலைநகராகச்‌ சிறந்து விளங்கியது உறந்தை, அக்‌காலத்தில்‌ சிராப்பள்ளி ஒரு சிற்றூராக அதன்‌ அருகில்‌ அமைந்திருந்தது. ஆனால்‌ நாளடைவில்‌ உறந்தையின்‌ சிறப்புக்‌ குறைய சிராப்‌பள்ளியின்‌ சிறப்பு ஓங்கியது. இன்று தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த நகரமாக விளங்குகிறது. சிராப்பள்ளி மாநகர்‌ நிலையையும்‌ பெறுகின்றது. பழம்பெருமை வாய்ந்த உறந்தை சிறப்பிழந்து உள்ளது. சமணர்கள்‌ மந்திரவலிமையினாலோ, தவ வலிமையினாலோ கல்மழையும்‌ மண்மழையும்‌ பொழியச்‌ செய்து உறையூரை அழித்‌தார்கள்‌ என்று தக்கயாகப்‌ பரணி கூறுகிறது.
“மலை கொண்‌ டெழுவார்‌ கடல்‌ கொண்‌ டெழுவார்‌
மிசைவந்து சிலா வருடஞ்‌ சொரிவார்‌
நிலை கொண்‌ டெழுவார்‌ கொலை கொண்‌ டெழுவார்‌
இவரிழ்‌ பிறர்‌ யாவர்‌ நிசாசரரே”?
இந்தத்‌ தக்கயாகப்பரணி கோயிலைப்‌ பாடியது. 70 ஆம்‌ தாழிசைக்குப்‌ பழைய உரைகாரர்‌, “உறையூரில்‌ கல்‌ வருஷமும்‌ மண்வருஷமும்‌(வருஷம்‌ மழை)பெய்வித்து அதனைக்‌ கெடுத்துத்‌ துரோகஞ்‌ செய்தார்‌ இவர்‌ (சமணர்‌) அதற்குப்பின்பு இராசதானி திருச்சிராப்‌ பள்ளியாய்த்து” என்று கூறுகிறார்‌, முதலாம்‌ மாறவர்மன்‌ சுந்தரபாண்டியனால்‌ (கி.பி. 1216 1238, உறையூர்‌ அழிக்கப்‌ பட்டது என்பது வரலாறு. கதுவாய்ச்சாத்தனார்‌ (நற்‌. 370), சல்லியன்குமரன்‌ (குறுந்‌. 309), சிழகந்தன்‌ (குறுந்‌. 257), பல்‌ கரயனார்‌ (குறுந்‌. 3714) முதுகண்ணன்‌ சாத்தன்‌ (குறுந்‌. 133), புறம்‌. 27, 29, 30, 325.) முதுகூத்தன்‌ (குறுந்‌. 353, 371, அகம்‌, 137, 329 புறம்‌. 331.) முது கொற்றன்‌ (குறுந்‌. 221. 390) இளம்பொன்‌ வாணிகனார்‌ (புறம்‌. 264.) ஏணிச்‌ சேரி முடமோசியார்‌ (புறம்‌, 13, 127 195, 241,374, 375) மருத்துவன்‌ தாமோதரனார்‌ (அகம்‌. 133, 257, புறம்‌. 60, 170, 321). ஆகிய சங்க காலப்‌ புலவர்கள்‌ உறையூரைச்‌ சேர்ந்தவர்கள்‌.
“நாடா நல்‌ இசை, நல்‌ தேர்ச்‌ செம்பியன்‌
ஓடாப்‌ பூட்கை உறந்தையும்‌ வறிதே”
(பத்துப்‌. சிறுபாண்‌, 82 83)
“ பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி” (பத்துப்‌. பட்டின 285)
“மறம்‌ கெழு சோழர்‌ உறந்தை அவையத்து
அறம்‌ கெட அறியாதாங்கு”’ (ந‌ற். 400;7 8)
“வளம்‌ கெழு சோழர்‌ உறந்தைப்‌ பெருந்துறை
நுண்மணல்‌ அறல்‌ வார்ந்தன்ன” (குறுந்‌. 116; 2 3)
கறங்கு இசை விழவின்‌ உறந்தைக்‌ குணாது” (அகம்‌. 4: 14)
“மழை வளம்‌ தரூஉம்‌ மாவண்‌ தித்தன்‌
பிண்ட நெல்லின்‌ உறந்தை ஆங்கண்‌”” (௸. 6:4 5)
“ஆரங் கண்ணி அடுபோர்ச்‌ சோழர்‌
அறம்‌ கெழு நல்‌ அவை உறந்தை அன்ன”’ (௸, 93; 4 5)
“வென்று எறி முரசின்‌ விறற்‌ போர்ச்‌ சோழர்‌
இன்‌ கடுங்‌ கள்ளின்‌ உறந்தை ஆங்கண்‌” (௸, 1[3525 6)
“தித்தன்‌ வெளியன்‌ உறந்தை நாள்‌ அவைப்‌..
பாடுஇன்‌ தெண்‌ இணைப்பாடு கேட்டு அஞ்சி” (௸. 226; 14 15)
“புனல்‌ பொரு புதவின்‌ உறந்தை எய்தினும்‌” (௸. 237: 14)..
“கெடல்‌ அ௬ நல்‌இசை உறந்தை அன்ன
நிதியுடை நல்நகர்ப்‌ புதுவது புனைந்து” (௸, 369:14 15)
“காவிரிப்‌ படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர்‌” (௸. 3854 5)
“மறம்கெழுசோழர்‌ உறந்தைப்‌ அவையத்து
அறம்‌ நின்றுநிலையிற்று ஆகலின்‌” (புறம்‌, 398.9)
“அறம்‌ துஞ்சு உறந்தை பொருநனை”’ (௸. 58;39)
“உறந்தை அன்ன உரைசால்‌ நன்கலம்‌” (௸. 352,110)
“செல்லா நல்‌இசை உறந்தைக்‌ குணாது
நெடுங்கை வேண்மான்‌ அருங்கடிப்‌ பிடவூர்‌” (௸. 395,19 20)
“தமிழ்‌ வரம்பறுத்த தண்புன னன்னாட்டு
மாடமதுரையும்‌ பீடா ருறந்தையும்‌
கலிகெழுவஞ்சியு மொலிபுனற்‌ புகாரும்‌
அரைசு வீற்றிருந்த உரைசால்‌ சிறப்பின்‌
மன்னன்‌ மாரன்‌ மகிழ்துணையாகிய
இன்னிள வேனில்‌ வந்தனன்‌”’ (சிலப்‌. 8:2 7)
“அறியரமையினின்‌ றிழி பிறப்புற்றோர்‌
உறையூர்‌ நொச்சி யொருபுடை யொதுங்கிப்‌
பன்னிருமதியம்‌ படர்நோயு ழந்தபின்‌
முன்னையுருவம்‌ பெறுக வீங்கிவரென” (௸.,10.,241 244)
“முறஞ்செவி வாரணமுன்‌ சமமுருக்கிய
புறஞ்சிழறை வாரணம்‌” (௸. 10. 247 248)
“பூவினுள்‌ பிறந்தோன்‌ நாவினுள்‌ பிறந்த
நான்மறைக்‌ கேள்வி நவில்குரல்‌ எடுப்ப
ஏம இன்துயில்‌ எழுதல்‌ அல்லதை
வாழிய வஞ்சியும்‌ கோழியும்‌ போலக்‌
கோழியின்‌ எழாது, எம்‌ பேரூர் துயிலே” (பரி. திரட்டு 8;7 11)
“யாணர்‌ நல்நாட்டுள்ளும்‌, பாணர்‌
பைதல்‌ சுற்றத்துப்‌ பசிப்பகை ஆகி,
கோழியோனே கோப்பெருஞ்சோழன்‌
பொத்துஇல்‌ நண்பின்‌ பொத்தியொடு கெழீஇ
வாய்‌ஆர்‌ பெருநகை வைகலும்‌ நக்கே” (புறம்‌. 212:6 10)