உரோடகம்‌

கந்தரத்தனார்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ உரோடகம்‌ என்ற ஊரினர்‌. எனவே உரோடகத்துக்‌ கந்தரத்தனார்‌ எனப்பெற்றார்‌. அகநானூற்றில்‌ ஒரோடகத்துக்‌ கந்தரத்தனார்‌ என உரோடகம்‌ என்ற பெயர்‌ ஒரோடகம்‌ எனக்‌ குறிக்கப்‌ பெற்றுள்ளது. செங்கற்பட்டு மாவட்டத்தில்‌ உரைகடம்‌ என்ற பெயருடன்‌ மூன்று ஊர்கள்‌ உள்ளன என்றும்‌, அவற்றுள்‌ ஒன்றன்‌ திரிபாக இப்பெயர்‌ இருக்கலாம்‌ என்று கருதும்‌ கருத்து ஆய்ந்து முடிபு காண வேண்டிய ஒன்று. நற்றிணையில்‌ 306ஆம்‌ பாடலும்‌, குறுந்தொகையில்‌ 155ஆம்‌ பாடலும்‌ அகநானூற்றில்‌ 69, 95, 191 ஆகிய பாடல்களும்‌ உரோடகத்துக்‌ கந்தரத்தனார்‌ பாடியவை,