‘உரைப்பொருட் கிளவி’ புணர்ச்சி

உரைப்பொருட்கிளவியாவது எதிர்முகமாக்கும் பொருளை யுடைய அம்ம என்னும்
இடைச்சொல். இஃது அம்ம கொற்றா என இயல்பாயும் அம்மா கொற்றா என நிலைமொழி
ஈறு நீண்டு இயல்பாயும் புணரும். (தொ. எ. 210, 212 நச்.)
அம்ம என்னும் உரைப்பொருட்கிளவியின் நீட்டம் விளியின் – கண்ணேயே
வரும். (தொ. சொ. 153 சேனா.)
கேள் என்று சொல்லுதற்கண் வருவது அம்ம என்னும் இடைச்சொல். (எ. கு.
பக். 200)