நிறத்தின்கண்ணும் ஓசையின்கண்ணும் சிறுபான்மை ஆய்தம் தோன்றும்
பொருள் குறித்தலையுடைய சொற்கள்.
எ-டு : ‘கஃஃ றென்னும் கல்லதர்
அத்தம்’
– கருமை :நிறம்
‘சுஃஃ றென்னும் தண்தோட்டுப் பெண்ணை’
– சுர்ர்:ஓசை. இச்சொற்களில் ஆய்தம் அளபெடுத் துள்ளது. (தொ. எ.
40 நச். உரை).