யான் யாம் நாம் நீ தான் தாம் – என்பன தொடக்கம் குறுகி முறையே என் எம் நம் நின் தன் தம் – எனத் திரிந்து, என்னை எம்மை நம்மை நின்னை தன்னை தம்மை – என்றாற் போல உருபேற்கும். (தொ. எ. 179, 188, 192 நச்.)