உருபு ஏற்கும்போது தம்முச் சாரியை பெறுவது

உருபேற்குமிடத்து எல்லாரும் என்பது தம்முச்சாரியை பெற்று உருபேற்று
உம்மையை இறுதிக்கண் கொண்டு, எல்லார் தம்மையும் – எல்லார்தம்மொடும் –
எல்லார்தமக்கும் – என்றாற் போலப் புணரும். (தொ. எ. 191 நச்.)