உருபுபுணர்ச்சிக்கண் ஓகார ஈற்றுப் பெயர்கள் சில ஒன்சாரியை பெற்று உருபேற்கும். எ-டு : கோ+ஒன்+ஐ = கோஒனை (தொ. எ. 180 நச்.) இது பிற்காலத்து‘ன்’ சாரியை ஆயிற்று. சோ – முதலிய ஓகார ஈற்றுச் சொற்கள் ஒன்சாரியை பெறும் வழக்கு இருப்பதாகத் தெரியவில்லை.