உயிர் ஈறாகிய முன்னிலைக் கிளவியின் புணர்ச்சி

முன்நின்றான் தொழிலை யுணர்த்தும் இகர ஈறும் ஐகார ஈறும் வன்கணம்
வரினும் இயல்பாகப் புணரும். எ-டு: நிற்றி கொற்றா, உண்டனை கொற்றா.
முன்நின்றானைத் தொழிற்படுத்தும் உயிரீறுகள் வன்கணம் வரின்
இயல்பாகப் புணர்வனவும், உறழ்ந்து முடிவனவும் உள.
எ-டு : கொணா கொற்றா, எறி கொற்றா - இயல்பு
நட கொற்றா, நடக் கொற்றா – உறழ்வு (தொ. எ. 151 நச். உரை)