உயிர்வினாவுடன் யாவினாவும் கூட்டியுரைத்தல்

ஆ எ ஏ ஓ என்ற உயிர்வினாவுடனே யா என்னும் உயிர்மெய் வினாவைக்
கூட்டியுரைத்தமை மயங்கக் கூறல் என்னும் குற்றம் ஆகாது. என்னையெனில்,
இது தொகைவகைவிரிபடச் செய்கின்ற நூல் ஆகலானும், முதல்வினா (எ, யா)
என்னும் பொருள் ஒப்புமையானும் என்பது. (நன்.66 மயிலை.)