உயிர்மெய்யில் மெய், தன்னொடு கூடிநின்ற உயிர் புணர்ச்சி யிடத்துப் பிரிந்து வேறு நின்றதாயின், தான் முன்னர்ப் பெற்ற புள்ளி வடிவே பெறும். எ-டு : ஆலிலை – ஆல்+இலை; அதனை – அது+அன்+ஐ (தொ. எ. 139 நச்.)