உயிர்மெய்ந்நிலை தம் இயல் மயக்கம் கிளத்தல்

உயிர்மெய் எழுத்தில் பன்னீருயிரும், மெய்யின் தன்மையாகிய வன்மை –
மென்மை – இடைமை – என்பவற்றில், தம்முடைய குறுமை நெடுமை என்ற தன்மைகள்
இணைந்தனவாகக் கூறுதல். உயிர்மெய்க் குறில் நெடில்களை வல்லெழுத்து
மெல்லெழுத்து இடையெழுத்து – என்று குறிப்பிடுதல் இக் கருத்துப்
பற்றியே. (தொ. எ. 47 நச். உரை)