உயர்திணைப்பெயர், விரவுப்பெயர் கு, கண் உருபொடு புணர்தல்

உயர்திணைப்பெயர் குவ்வுருபு அடுத்தவழி வல்லெழுத்து மிகுதலும், கண்
உருபு அடுத்தவழி மிகாமையும் உடைத்து. விரவுப்பெயர் நிலையும்
அதுவே.
எ-டு : நம்பிக்கு; நம்பிகண்; நங்கைக்கு; நங்கைகண்; அவனுக்கு;
அவன்கண்; அவளுக்கு; அவள்கண் – என உயர்திணைப் பெயர் கு, கண் – இவற்றொடு
புணர்ந்தவாறு.
கொற்றிக்கு; கொற்றிகண் கோதைக்கு; கோதை கண்; தாய்க்கு; தாய்கண்;
மகனுக்கு; மகன்கண் – என விரவுப்பெயர் கு, கண் இவற்றொடு புணர்ந்த வாறு.
(தொ. எ. 114 நச். உரை)