இடையே உம் என்ற எண்ணிடைச்சொல் மறைய, உம்மைத் தொகையாய் நிற்கும்
இருபெயர்கள் கூடிய தொகைச்சொற்கள், நிலைமொழி ஆகார ஈற்றுச் சொல்லாயின்,
வருமொழி வன்கணத்தில் தொடங்கின், இடையே எழுத்துப்பேறள பெடையாகிய
அகரமும் வல்லெழுத்தும் மிக்குப் புணரும். இயல்புகணம் வருமொழியாக
வரினும் அகரம் பெறும்.
எ-டு : உவா+பதினான்கு = உவாஅப்பதினான்கு (வன்கணம்)
இரா + பகல் = இராஅப்பகல் (வன்கணம்)
இறா + வழுதுணங்காய் = இறாஅ வழுதுணங்காய் (இயல்புகணம்)
இவை முறையே – உவாவும் பதினான்கும் எனவும், இரவும் பகலும் எனவும்,
இறாவும் வழுதுணங்காயும் எனவும் பொருள்பட்டவாறு. (தொ. எ. 223 நச்.
உரை)