இளங்கண்ணனார் என்ற சங்ககாலப் புலவர் உம்பற்காடு என்னும் ஊரினர் எனத் தெரிகிறது. ஆகவே அவர் உம்பற்காட்டு இளங்கண்ணனார் எனப் பெற்றார். இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் உம்பற்காட்டில் தன் கோல் நிறீஇ ஆண்டார். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தால் பாடிய பரணர் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றார். உம்பற்காடு சேர நாட்டுப் பகுதியாகும். உம்பல் என்ற சொல் யானையைக் குறிக்கும். எனவே யானைகள் மிகுந்த காடு என்ற பொருளில் இவ்வூர் பெயர் பெற்றிருக்கலாம். அகநானூரற்றில் 264ஆம் பாடல் உம்பற்காட்டு இளங்கண்ண னார் பாடியது.
“இமைய வரம்பன் தம்பி அமைவர
உம்பற்காட்டைத் தன்கோல் நிறீஇ” (பதிற். மூன்றாம் பத்தின் பதிகம் 1 2)