பகரமெய்யை ஊர்ந்து வரும் முற்றுகரச் சொல் ஒன்றே. அஃது ஏவல் வினை,
தொழிற்பெயர் ஆகிய இரண்டிடத்தும் நிற்கும் பொருண்மை யுடைத்தாம்.
அது ‘தபு’ என்னும் சொல். அது ‘கெடுவாயாக’ என ஏவற் பொருட்டாக
வருவது; பெயராமிடத்துத் ‘தவறு’ என்பது பொருள். அஃது இக்காலத்துத்
தப்பு என வழங்குகிறது. (தொ. எ. 76. ச.பால.)