உண்ணா குதிரை உண்ணாக் குதிரை , உண்ணாகிடந்தனஉண்ணாக் கிடந்தன : வேறுபாடு

உண்ணா குதிரை(கள்) என்புழி, ‘உண்ணா’உண்ணாதவை என வினையாலணையும்
பெயராகப் பொருள்படும். உண்ணா தனவாகிய குதிரை(கள்) என்க. ஆண்டு வலி
மிகாது. ‘உண்ணா’ முற்றாய வழியும் அது.
உண்ணா கிடந்தன என்புழி, ‘உண்ணா’ உண்ணாதனவாய் என முற்றெச்சமாகப்
பொருள்படும். உண்ணாதனவாய்க் கிடந்தன என்க. ஆண்டும் வலி மிகாது.
எதிர்மறைப் பெயரெச்சமும் செய்யா என்றும் வாய்பாட்டு வினையெச்சமுமாக
‘உண்ணா’ என்பது நிற்பின், வருமொழி வல்லெழுத்து மிகப்பெறும், உண்ணாக்
குதிரை- உண்ணாத குதிரை; உண்ணாக் கிடந்தன- உண்டு கிடந்தன. (நன். 171
சங்கர.)