‘உடைமையும் இன்மையும் ஒடுவயின்’ ஒத்தல்

ஏனை உருபுகள் வரும்வழி வேண்டும் சாரியை பலவற்றையும் மூன்றனுருபாகிய
ஒடு வேண்டாது. வரும்.
மகர ஈற்று மொழிகள், இரண்டனுருபு நான்கனுருபு முதலிய வற்றொடு
புணருமிடத்து, இடையே அத்துச்சாரியை பெற்றே வரும். ஒடுஉருபுக்கு
இவ்விதி விலக்காகும்.
எ-டு : மரம் + ஐ = மரத்தை; மரம் + கு = மரத்துக்கு; மரம் + ஒடு
= மரத்தொடு, மரமொடு
கேரள பாணினீயத்துள்ளும், தனத்தை, தனத்தொடு தன மொடு, தனத்திற்கு
முதலிய உதாரணங்கள் காட்டப்பட் டுள்ளன.
உருமினை, வளத்தினை, காலத்தினை – உருமிற்கு, வளத்திற்கு,
காலத்திற்கு, எனச் சாரியை பெற்றே வருவன, ஒடு உருபிற்கு, உருமினொடு
உருமொடு – வளத்தினொடு வளமொடு – காலத்தினொடு காலமொடு – எனச் சாரியை
பெற்றும் பெறாமையும் வருதல் கொள்ளப்படும்.
காமமொடு (முருகு அடி 134) சீற்றமொடு (பதிற். 16) ‘காலமொடு’
(தொ.சொ.250 சேனா.) எனப் பண்டைய செய்யுள்களிலும் தொல்காப்பிய
நூற்பாவிலும் காணலாம்.
பலவற்றொடு என்பது போலவே, பலவொடு என வருதலும் தொல்காப்பியர்
கருத்தாம். நெஞ்சமொடு (தொ. பொ. 40, 113, 204 நச்.), பக்கமொடு (41),
கரணமொடு (142), ஆர்வமொடு (146), உள்ளமொடு (146,147), சுற்றமொடு (192)
– எனத் தொல்காப் பியத்தும் மகர ஈற்றுச் சொற்கள் பல சாரியை இன்றி
வருதல் காணப்படுகிறது. ஆயின் பல என்பது பலவொடு என்று அதன்கண்
காணப்படாமை நோக்க, பலவற்றொடு என அது சாரியை பெற்றே வருதல் வேண்டும்
என்பது நச். கருத்து. (எழு. 132 நச்.) (எ. ஆ. பக். 103,104)
பல்ல, பல, சில, உள்ள, இல்ல – என்ற பெயர்கள் ஒடு உருபேற்குமிடத்து
வற்றுச்சாரியை பெற்றே வரும்.
வருமாறு: பல்லவற்றொடு, பலவற்றொடு, சிலவற்றொடு, உள்ளவற்றொடு,
இல்லவற்றொடு. (தொ. எ. 132, 174, நச்.)