உடுப்பூர்

கண்ணப்ப நாயனார் புராணத்தில் கண்ணப்பரின் பிறந்த இடம் பற்றிப் பேசுகையில் சேக்கிழார், பொத்தப்பி நாட்டில்,
இத்திரு நாடு தன்னில் இவர் திருப்பதி யாதெனில்
நித்தில் அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்
மத்த வெங்களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி
ஒத்த பேரரணம் சூழ்ந்த முதுபதி உடுப்பூராகும் ( 16-2 )
என இப்பதியின் தன்மை உரைக்கின்றார். குன்றவர் அதனில் வாழ்வார் என்று அடுத்த பாடலில் இப்பதியின் தன்மை கூறும் நிலை, இது மலைப்பகுதி என்பதைத் தெளிவாக்கும். எனவே அரணம் சூழ்ந்த முதுபதி ஆகையால் உடுப்பூர் என்ற பெயர் அமைந்திருக்கலாம் அல்லது மலையில் வாழும் உடும்புகள் நிறைந்த பகுதியாக இருக்கலாம். எண்ணங்கள் இது தொடர்பாக இல்லை.