நிலைமொழி ஈறு மெய்யெழுத்தாக வருமொழி முதல் உயிரெழுத்தாயின், வருமொழிமுதல் உயிர் நிலைமொழி யீற்றுமெய்யை ஊர்ந்து உயிர்மெய்யாய்ப் புணரும். இஃது இயல்பு புணர்ச்சியாம். எ-டு : ஆல்+ இலை = ஆலிலை (நன். 204)