உசாத்தானம்

இன்று கோயிலூர் என்று வழங்கப்படும் இத்தலம் தஞ்சா வூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. இராமர் இலக்குவர் போன்றோர் வழிபட்ட இத்தலம் சம்பந்தர் பாடல் பெற்றது.
முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்
தில்லை யானுறைவிடம் திருவு சாத்தானமே -291-2
இங்குள்ள கோயிலின் செல்வாக்கு காரணமாகப் பிற்காலத் தில் கோவிலூர் என்று வழங்கப்பட்டு இருத்தல் கூடும். சூத வனம் என்பது இன்னொரு பெயர்..