சங்ககாலப் புலவர் ஒருவர் இவ்வூரினர் உகாய்க்குடிகிழார் எனப் பெற்றார். குறுந்தொகையில் 63ஆம் பாடல் உகாய்க்குடி கிழார் பாடியது. உகா என்ற சொல் ஓமை, உவா மரங்களைக் குறிக்கும். இவ்வகை மரங்கள் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் குறிக்கப் பட்டுள்ளன. இவ்வகை மரங்கள் நிறைந்த பகுதியே +உகாய்க்குடி எனப் பெயர் பெற்றிருக்கலாம்..