ஞணநமலவளன – என்ற எட்டு மெய்களையும் இறுதியாக வுடைய முதனிலைத்
தொழிற்பெயர்கள், வருமொழி வன்கணத்தொடும் மென்கணத்தொடும் இடைக்கணத்து
வகரத்தொடும் புணரும்வழி உகரச்சாரியை பெறும்; வருமொழி முதற்கண் யகரமோ
உயிரெழுத்தோ வரின் உகரச்சாரியை பெறாது இயல்பாக முடியும்.
எ-டு : மண்: மண்ணுக் கடிது; மண்ணு மாண்டது; மண்ணு வலிது, மண்
யாது; மண்ணெழுந்தது.
மண் – கழுவுதல் என்னும் பொருளது. (தொ. எ. 163 நச்.)