அது இது முதலிய முற்றுகரத்தை நீக்கவேண்டித் தனிக்குறிலி னாகிய
அசையை விடுத்து,
தனிநெட்டெழுத்தை அடுத்த குற்றியலுகரம் – காடு; தனிநெடிலொற்றை
அடுத்த குற்றியலுகரம் – காட்டு; குற்றொற்றை அடுத்த குற்றியலுகரம் –
கண்டு; குறிலிணையை அடுத்த குற்றியலுகரம் – பரசு; குறிலிணை ஒற்றை
அடுத்த குற்றியலுகரம் – வறண்டு; குறில் நெடில் அடுத்த குற்றியலுகரம் –
பலாசு; குறில் நெடில் ஒற்றை அடுத்த குற்றியலுகரம் – கிடேச்சு
என அசைபற்றிக் குற்றியலுகரம் வருமிடம் ஏழ் என்று கொள்ளின்,
பிண்ணாக்கு-சுண்ணாம்பு – பட்டாங்கு – விளை யாட்டு- இறும்பூது – முதலிய
சொற்கள் இவற்றுள் அடங்கா. பிண்ணாக்கு – சுண்ணாம்பு -பட்டாங்கு –
விளையாட்டு-என்பனவற்றை ஈற்றயலசை பற்றி நெட்டொற்றிறுதிக் குற்றிய
லுகரமாகவும்,இறும்பூது என்பதனை நெடிலிறுதிக் குற்றிய லுகரமாகவும்
அடக்கிக் கொள்ளினும், போவது – வருவது – ஒன்பது – முதலியன ஏழ்வகையுள்
ஒன்றனுள்ளும் அடங்காமை யின், அசையைக்கொண்டு குற்றியலுகரத்தை ஏழ்
வகையுள் அடக்குதல் நிரம்பாத இலக்கணமாம். (சூ. வி. பக். 29)