ஈற்றடி ஆதிமடக்கு

‘இவள்அளவு தீஉமிழ்வ(து) என்கொலோ, தோயும்கவள மதமான் கடாமும் – திவளும்மலையார் புனலருவி நீ அணுகா நாளின்மலையா மலையா நிலம்?’மலையா(ம்) மலைய அநிலம் – பொதியமலையில் தோன்றும் தென்றற்காற்று.“தலைவ! இவளை நீ வந்தடையாத நாள்களில், யானையின் முகத்தினின்றுவழியும் மதநீரை ஒத்து அருவி பாயும் பொதிய மலையினின்று தோன்றும்தென்றற்காற்று இவளொருத்திக்கு மாத்திரம் நெருப்பைக் கக்குவதன் காரணம்யாதோ?” என்று தோழி கூறிய இப்பாடல் ஈற்றடியின் ஆதியில் ‘மலையா மலையா’என மடக்கு வந்தவாறு. (தண்டி. 95 உரை)