யரழ – என்னும் மூன்று ஒற்றுக்களையும் அடுத்துக் கசதபங ஞநம-க்கள்
ஈரொற்றாக வர, அவற்றை அடுத்துக் குற்றியலுகர ஈறு அமையும். அப்பொழுது
குற்றியலுகரத்துக்கு முன்னே வந்த எழுத்து ஈரொற்றுத் தொடரில்
வல்லெழுத்தாகவோ மெல்லெழுத்தாகவோ இருக்கும். அடுத்த எழுத்தைக் கொண்டே
குற்றியலுகரத்துக்குப் பெயரிடப்படும் ஆதலின், குற்றியலுகரத்தை அடுத்த
எழுத்து ஈரொற்றுத் தொடரில் இடையெழுத்தாக வாராமையால், ஈரொற்றை இடையே
கொண்ட குற்றியலுகர ஈற்றுச் சொல் இடைத்தொடர்க் குற்றியலுகரம்
ஆகமாட்டாது.
எ-டு : மொய்
ம்பு, நொய்
ம்பு, மொய்
த்து, பொய்
த்து; ஆர்
க்கு, ஈர்
க்கு; வாழ்
த்து, வாழ்
ந்து.
இரண்டு ஒற்று இடைக்கண் தொடர்ந்துநிற்கும் சொல்லின் கண், இடையின
ஒற்று முன்நின்றால், மேல் இடையினம் தொடர்ந்து நில்லா; வல்லினமும்
மெல்லினமுமே தொடர்ந்து நிற்கும். ஆதலின் சொல்லில் இடையின ஒற்று
இருப்பினும், குற்றியலுகரத்தை அடுத்த (ஈற்றயல்) எழுத்து வல்லொற் றாகவோ
மெல்லொற்றாகவோ இருத்தலின், அவ்வல் லொற்று மெல்லொற்றுப் பெயராலேயே
குற்றியலுகரம் குறிப்பிடப் பெறும் என்பர் நச். (தொ. எ. 407)