செய் என்ற ஏவல்வினையை அடுத்து வி-பி- என்ற விகுதிகளுள் ஒன்று
வருமாயின், செய்வி என்னும் ஓரேவல்மேல் ஓரேவல்; இவ்விகுதி மீண்டும்
இயையின் செய்விப்பி என்னும் வாய்பாட்டு ஈரேவல் நிகழும்.
எ-டு : நட – நடப்பி – நடப்பிப்பி; வா – வருவி- வருவிப்பி
செய் என்னும் ஏவல்வினைக்கண், ஏவல் வினைமுதல் ஒன்று; இயற்றும்
வினைமுதல் ஒன்று. செய்வி என்பதன்கண், ஏவல் வினைமுதல் இரண்டு; இயற்றும்
வினைமுதல் இரண்டு. செய்விப்பி என்பதன்கண், ஏவல் வினைமுதல் மூன்று;
இயற்றும் வினைமுதல் மூன்று.
நட – நடத்து – நடத்துவி – நடத்துவிப்பி; வருந்து – வருத்து –
வருத்துவி- வருத்துவிப்பி – எனவும் வரும். (நன். பத. 11 இராமா.)